நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ""பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்"" எனும் தொனிப்பொருளில் அமையப்பெற்ற சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் உதவி பிரதேச செயலாளர் எம்.பார்த்திபன் தலைமையில் காரைதீவு கமு/கமு/ விபுலானந்தா மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர், கலாச்சார உத்தியோகத்தர், ஆலோசனைக்கான ஆசிரியர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பாடசாலை மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய பிள்ளைகளுக்கு கலாச்சார திணைக்களத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
Post A Comment:
0 comments so far,add yours