எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு


எதிர்வரும் பாராளுமன்று தேர்தல் நவம்பர் மாதம் 14 திகதி இடம்  பெறவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு  2024 பாராளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர்  மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு  அத்தாட்சிபடுத்தும் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபரும்  தெரிவத்தாட்சி அலுவலருமான  திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள்   தபால்மூல வாக்களிப்பு  அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.

மேலும் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் படிமுறைகள் தொடர்பான விளக்கங்களும் இதன் போது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான், திணைக்கள தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  392 வேட்பாளர்கள்  இம்முறை  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours