மாளிகைக்காடு செய்தியாளர்

முஸ்லிம்களுக்கு அடையாளம் பெற்றுத்தந்த மர்ஹூம் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் ஒரு தலைவனாக எல்லா மக்களையும் தன் குழந்தைகளாக நினைத்து கடமை புரிந்தார். அவரின் மறைவிற்கு பின் வந்த முஸ்லிம் தலைவர்கள் சுயநலத்தை விதைத்து மக்களை திசை திருப்பி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.


அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே இதனைத்  தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,  

நல்லதொரு தந்தை ஒரு பிள்ளை நுளம்பு கடியிலும், இன்னொரு பிள்ளை வெறும் தரையிலும் மற்றப்  பிள்ளை குளிரூட்டப்பட்ட அறையிலும் படுத்து தூங்க இடமளிக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒரு தலைவன் எமக்குத் தேவை. முஸ்லிங்களை சமமாக வழிநடத்தும் பக்குவம் உள்ள தலைவர்களை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒருத்தன் நடுவீதியில் போதையில் நிதானம் இழந்து கிடந்ததைக் கண்டும் அவனுக்கு நாம் வாக்களிப்போம் என்றால் அதுதான் முட்டாள் தனம். கடந்த காலங்களில் இருந்தது போன்று ஊர்வாதம் இம்முறையும் இருந்தால் நாம் சமூக அளவில் தோற்போம். நிச்சயமாக இனவாத, பிரதேச வாத சிந்தனை கொண்டோர்களினால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது. நான் ஊரின் தலைமை பள்ளிவாசல் நிர்வாக தலைவராக இருந்த காலத்தில் போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் திருமணங்களை கூட இடைநிறுத்தி இருந்தமையை மக்கள் அறிவார்கள். நாம் நமது எதிர்கால சந்ததிகளை சிறப்பாக வாழ்விக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours