வடக்கு கிழக்கில் பிரச்சினைக்குரிய மாவட்டங்களாக கருதப்படும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பொதுச் சின்னத்தில் தேர்தலில் நிற்கின்ற பொழுது மாவட்டங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும்.
இவ்வாறு
இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதிநிதியும், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய சமகால தேர்தல் சூழல் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கின்றன.
தமிழரசுக்
கட்சி வீட்டுச் சின்னத்திலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு
சின்னத்திலும் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது. அது
வரவேற்புக்குமுரியது. இவ் விரண்டு கட்சிகளும்
தனித்தனி
சின்னத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலு கேட்பதை விட இரண்டு மாவட்டங்களிலும்
இரண்டில் ஒரு பொதுவான சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டால் இரண்டு
மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும். அதேவேளை ஒரு போனஸ்
ஆசனம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
அது வீடாகட்டும் குத்து விளக்காகட்டும் . ஆனால் ஒரு சின்னம் சிறந்தது.
அதேவேளை இந்த இரண்டு கூட்டணிக்குள் தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகள் மாத்திரமே இணைக்கப்பட வேண்டும் .
ஏனைய ஈ பி டி பி, டிஎம்பிபி ,ஜேவிபி போன்ற கட்சிகள் கேட்பதால் பாதிப்பு இல்லை.
நாம் கட்டாக இருந்தால் எம்மை அசைக்க முடியாது.
ஜேவிபிக்கு
போடுகின்ற வாக்குகள் ஒரு சிங்களவர் வருவதற்கும் , தொலைபேசிக்கு
போடப்படுகின்ற வாக்கு ஒரு முஸ்லிம் வருவதற்கும் வழிசமைக்கும் .
எனவே இந்த வரலாற்று துரோகத்தை எந்த தமிழரும் செய்யக்கூடாது .
புதிய அரசாங்கம்... 6 மாதங்கள் பொறுத்திருங்கள்; சுயரூபம் தெரியும்!
இலங்கை
வரலாற்றில் என்றுமில்லாதவாறு இடதுசாரி புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.
அனைவரும் ஓகோ என்று வரவேற்கிறார்கள். ஜேவிபியின் கடந்த கால செயற்பாடுகளை
நாம் அறிவோம். அவர்கள் அவர்களினத்தின் 60,000 இளைஞர்களை கொன்று
குவித்தவர்கள். கூடுதலான அரசியல் சொத்தை வீணாக்கியவர்கள். அன்றைய
ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள்.
இன்று சூரன் தலையை மாற்றி வருவது போல் வேறுஒரு முகத்தோடு தேசிய மக்கள் சக்தியாக வருகிறார்கள் .
எனவே,
எந்த விதத்திலும் அவர்களோடு இணைந்து அல்லது அவர்களுக்கு வாக்கு கேட்பது
என்பது தமிழர்களுக்கு இழைக்கும் வரலாற்று துரோகமாக பார்க்கப்படும் . எந்த
தமிழரும் இதற்கு துணை போகக்கூடாது.
புதிய
அரசாங்கம் வந்ததும் சகல மதங்களுக்கும் சம உரிமை என்று சொல்லப்பட்டது.
ஆனால் பௌத்த மதத்திற்கு மாத்திரமே அமைச்சு வழங்கப்பட்டிருக்கின்றது .ஏனைய
சமயங்களுக்கு அமைச்சு இல்லை. சிங்கள பேரினவாதம் மீண்டும் தலை தூக்கும்
ஆபத்து இருக்கின்றது .
புதிய அரசியல் யாப்பு
மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். முதலிலே
13 வது அரசியலமைப்பு திருத்தத்தை பூரணமாக அமுல்படுத்துங்கள் அதுவே எமக்கு
போதுமானது.
எனவே புதிய அரசாங்கத்தின் சுயரூபத்தை இன்னும் ஆறு மாதங்களில் தெரிந்து கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்.
எது
எப்படியோ, இரு மாவட்டங்களிலும் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட
வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்காக எந்த விட்டுக்
கொடுப்பையுயும் வழங்க தயாராக இருக்கின்றேன்.
ஒற்றுமை ஒன்றே எம்மை உயர்த்தும். என்றார்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
Post A Comment:
0 comments so far,add yours