மட்/பட்ஃ/குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய திபர் ஆசிரியர்களை தூக்கிச் சென்று தங்களது நன்றியை தெரிவித்த சம்பவம் ஒன்று குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும்போது மாணவர்களின் மனதில் ஆசிரியர்களுக்கான மரியாதை மீண்டும் ஒருமுறை எழுப்பப்படுகிறது. ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் பாடங்களை கற்பிப்பவர்கள் மட்டுமல்ல; மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாகவும் நண்பனாகவும் இருந்து நல்ல நிலையை மாணவன் அடைவதற்கு உறுதுணையாக செயல்படுகின்றார்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்காக கொண்டாடப்படுகின்ற
ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் மாணவர்கள் பல்வேறு வழிகளில் தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தலாம். கையால் செய்த அட்டைகள் கவிதைகள் பாடல்கள்' நன்றியுரை ஆகியவற்றின் மூலம் தங்கள் நன்றியை தெரிவிக்கலாம். மேலும்' ஆசிரியர்களுக்கு பிடித்தமான உணவுகளை தயாரித்து கொடுப்பது, அவர்களுக்கு உதவும் சிறிய வேலைகளைச் செய்து கொடுப்பது போன்ற செயல்களும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஆனால் பட்டிருப்பு வலயத்துக்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய மாணவர்கள் இவற்றுக்கெல்லாம் அப்பால் சென்று தங்களுக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களை தங்களது கரங்களால் தூக்கிச் சென்று மாலையிட்டு வரவேற்று ஆசி பெற்றதுடன் அப்பாட சாலையில் இதற்கு முன் கல்வி கற்பித்து ஓய்வு நிலைக்குச் சென்றுள்ள அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து அவர்களுக்கு கௌரவம் வழங்கி ஆசி பெற்றதுடன் தாங்கள் இதுவரையில் அவ்வா ஆசிரியர்களால் கற்றறிந்த கலைகள் மூலம் அவர்களை வரவேற்ற நிகழ்வொன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றுள்ளது அதாவது மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த கராத்தே கலை கூத்துக்கலை நாட்டியக்கலை மற்றும் பாண்டு வாத்திய கலை இசைக்கலை என்பவற்றின் ஊடாக அவர்களை வரவேற்று மகிழ்வித்ததுடன் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசியும் பெற்றுள்ளனர். இந்நிகழ்வானது அம்மாண வர்களின் பணிவான நிலையையும் கனிவான குணத்தையும் காட்டுவதோடு அம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மிகச் சிறப்பான முறையில் இம்மாணவர்களை வழிப்படுத்தி நல்ல நடத்தைக்கு ஆளாக்கி உள்ளார்கள் என்பது புலனாகின்றது.
ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பங்களிப்பை உணர்த்துவதாகும். ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்துஇ அவர்களுக்கு மரியாதை செலுத்தும் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பது
இன்றைய சூழலில், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாணவர்களின் கவனம் பல இடங்களுக்கு சிதறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில், ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தை கவருவதும்இ அவர்களை கல்வியில் ஈடுபடுத்துவதும் மிகவும் சவாலான பணியாக உள்ளது. ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் மூலம்இ ஆசிரியர்களின் இந்த முயற்சிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம் ஒரு நாள் மட்டுமல்ல,மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டலாகும். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் அறிவு ஆகியவற்றை மதித்துஇ அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றிஇ நல்ல குடிமக்களாக
மாறுவதற்குவழி சமைக்கும் இவ்வாசிரியர் தின கொண்டாட்டமானது மிகச் சிறப்பாக இந்நோக்கத்தை நிறைவேற்று முகமாக இப்பாடசாலையில் இடம் பெற்றிருப்பது இப்ப பாடசாலையின் அதிபர் சோ. செல்வம் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டலை எடுத்துக்காட்டுவதோடு ஏனைய பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என்பது மறுக்கொணா உண்மையாகும்.
'
Post A Comment:
0 comments so far,add yours