( வி.ரி. சகாதேவராஜா)
ஜனநாயக
தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றிக்காக கல்முனை புலவிப்
பிள்ளையார் ஆலயத்தில் உவெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் ஏற்பாட்டில் விசேட
பூசை வழிபாடு நிகழ்வு இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.
அங்கு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்திலே
போட்டியிடுகின்ற வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்
நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சோ. புஷ்பராசா, மற்றும்
கி. லிங்கேஸ்வரன .த.துரைசிங்கம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு
அளிக்கப்பட்டது.
நிகழ்வில் கல்முனை புத்திஜீவிகள் வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் உறுப்பினர்கள், உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours