( வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச
முதியோர் மற்றும் சிறுவர் தினத்தில் திருக்கோவில் பிரதேச காயத்ரி கிராமம்
மற்றும் மண்டானை கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 சிரேஸ்ட
பிரஜைகளுக்கு பரிசு வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது.
திருக்கோவில் சமூக தரிசன நிறுவனம்(SVO) இந்த ஏற்பாட்டை செய்தது.
சமூக தரிசன நிறுவன ஸ்தாபக தலைவர் பி.நந்தபாலு தலைமையில் காயத்ரி கிராமம் சமூக தரிசன நிறுவனம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது..
ஆன்மீக
அதிதிகளாக சிவஸ்ரீ கிருபாகரக் குருக்கள் , திருநாவுக்கரசு நாயனார்
குருகுலப்பணிப்பாளர் கண. இராஜரெத்தினம்( கண்ணன் ) ஆகியோர் கலந்து
சிறப்பித்தார்கள்.
கௌரவ
அதிதிகளாக முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொத்துவில்
உப தவிசாளர் பெருமாள் பார்த்திபன் பார்த்திபன் ஓய்வு நிலை உதவிக் கல்விப்
பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து
சிறப்பித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours