நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 2026 உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களிடம் அதிபர் திருமதி ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் புகைப்பட நகல் இயந்திரம் (Photocopy Machine) ஒன்றை பெற்றோர்கள் அன்பளிப்பு செய்துள்ளனர்.
இப்புகைப்பட நகல் இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை (25) கல்லூரி முதல்வர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இவ் உயரிய பணியில் பங்களித்த அனைத்து பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அதிபர் திருமதி ஏ.பி. நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours