எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்திய "கிழக்கின் ஓவியத் திருவிழா" ஓவிய கண்காட்சி இன்று (25) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"கிழக்கின் ஓவியத் திருவிழா" எனும் தலைப்பில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சியானது எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தங்கராசா மலர்ச்செல்வன் உள்ளிட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், கலாசார உத்தியோகத்தர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த ஓவியக் கண்காட்சியினை சிறப்பித்திருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours