(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நற்பிட்டிமுனை உதைப்பந்தாட்ட லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று (12) நற்பிட்டிமுனை அஷ்ரஃப் மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், அதிதிகளாக முன்னாள் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மர்ஹும் மாயோன் முஸ்தபாவின் புதல்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மயோன் கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவரும் எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் உபசெயலாளரும் கல்முனை அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப், உதைப்பந்தாட்ட பீஃபா நடுவர், பயிற்றுவிப்பாளர் ஜப்ரான் மற்றும் பாடசாலையின் அதிபர்களும் கழகங்களுடைய தலைவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours