( வி.ரி.சகாதேவராஜா)

அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம் (ஒஸ்கார்- AusKar ) ஏற்பாடு செய்த வாணி விழாவுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு சித்தர் கல்வியகத்தில்  நடைபெற்றது.

இந் நிகழ்வு கலைமகள் சனசமூக நிலையத்தில் சித்தர் கல்வியகத்தலைவர் மு.துஸ்யந்தன் தலைமையில் நேற்று முன்தினம்(12) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின்  பொதுச் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அகிலன் நடேசன் கலந்து சிறப்பித்தார்.
 விழாவில் ஒஸ்கார் அழைப்பின் பேரில் கௌரவ அதிதிகளாக  ஒய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி .ரி. சகாதேவராஜா ,எந்திரி எஸ்.பிரதீபன் மற்றும் சிறப்பு அதிதிகள், ஒஸ்கார் கள செயல்பாட்டு குழு உறுப்பினர்கள்,காரைதீவு .ஒர்க் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒஸ்கார் அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) தலைமையிலான ஒஸ்கார் குடும்ப உறுப்பினர்கள் இக் கற்றல் உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தனர்.

 என்றும் கல்வி செயற்பாடுகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் அளிக்கும் ஒஸ்காரின்  அணுகுமுறையின் ஓர் சிறப்பம்சமாக இம்முறை ஒஸ்கார் இந்த வாணிவிழா கொண்டாட்டத்தை சித்தர் கல்வியகத்தோடு இணைந்து நடாத்தியது என்று ஒஸ்கார் அமைப்பின் செயலாளர் திருச்செல்வம் லாவண்யன் தெரிவித்தார்.

 இதன்போது சித்தர் கல்வியகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒஸ்கார் பாடசாலை உபகரண பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை சிறப்புற ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும், அனுசரணை வழங்கிய ஒஸ்கார் குடும்ப உறுப்பினர்களுக்கும்  ஒஸ்கார் அமைப்பின்  தலைவர்  கந்தசாமி பத்மநாதன் ராஜன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours