எதிர்வரும்
பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை
தமிழரசுக்கட்சிக்கு எதிராக மூன்று தமிழர்கள் சமர்ப்பித்த ஆட்சேபனை மனுக்கள்
நிராகரிக்கப்பட்டன .
அம்பாறை
மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வேட்புமனு ஆட்சேபனை மற்றும்
பரிசீலனை கூட்டத்தில் இந்த ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன .
தமிழர்களான செ.இராசையா, த. தர்மேந்திரா, கே.துஷானந்த் ஆகிய மூவரும் இந்த ஆட்சேபனை மனுக்களைதெரிவித்து இருந்தனர் .
அதனை பரிசீலீத்த மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையிலான குழுவினர் அதனை நிராகரித்தனர்.
அதன் வாயிலாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்புமனு போட்டியிடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours