( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க சம்மாந்துறை மற்றும் கல்முனை வலயங்களுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்கு விஜயம் செய்த அவர் சகல பிரிவுகளுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டார்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார் தலைமையிலான கல்வி பணிப்பாளர்கள் அவருக்கு உதவியாக விளக்கமளித்தனர்.
பணிமனையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த மற்றும் கட்டுமான வேலைகள் தொடர்பாகவும் பார்த்து கேட்டறிந்தார்.
அதேவேளை கல்முனை வலயக்கல்விப் பணிமனைக்கும் விஜயம் செய்து வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ். சஹதுல் நஜீமைச் சந்தித்து கேட்டறிந்தார்.
அதேவேளை சிங்கள மகா வித்தியாலயம் விபுலானந்த வித்தியாலயம் போன்ற ஒருசில பாடசாலைகளுக்கும் விஜயம் செய்தார்.
Post A Comment:
0 comments so far,add yours