பாராளுமன்ற ஆசனம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஓர் இடம் அல்ல, தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களுக்காக இறங்கி செயல்படுவதற்காகவே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் கட்சியின் தலைமை வேட்பாளருமான அருண்மொழிவர்மன் தம்பிமுத்து

இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டினுடைய நிலைமை கேள்விக்குறியாக தான் சென்று கொண்டு இருக்கின்றது. நேற்றைய தினம் அருகம்பையில் ஏதோ இடம்பெற்றதாக கூறப்படுகிறது, நடக்கப்போகின்றது என்று எல்லாம் கூறுகிறார்கள் ஆனால் இதில் அடிப்படை விடயம் என்னவென்றால் இந்த நாடு இன்னும் கேள்விக்குறியில் தான் போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. 

பாராளுமன்றத்துக்கு செல்ல இருப்பவர்கள் வெறுமனே மாற்றீடு என்று சொல்லிக்கொண்டு ஒருவரிடத்தில் இருந்தவர்கள் இன்னொரு இடத்திற்கு வந்து இருந்துவிட்டு தம்மை மாற்றீடு என கூற முடியாது.

தமது திறமைகளை வாயால் பேசாமல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து காட்ட வேண்டும். தமிழ் தேசியம் பேசும் நாங்கள் கூட மக்களின் அன்றாட வாழ்க்கையை உணர வேண்டும் மக்களுக்கு வாழ்வாதார பிரச்சனை காணப்படுகின்றது என்றால் இந்த நாடு முன்னேற வேண்டும். தமிழர்களின் இனப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மை என தெரிவித்தார்.



Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours