இலங்கை தமிழரசு கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பிரதான தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் சதிகளை மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் மற்றும் தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இடையில் இன்று (14) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் களமிறங்கிய போது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான தீர்வுகளை பெறலாம் என நினைத்திருந்தோம். துரதிஸ்டவசமாக கோட்டாபய ராஜபக்சவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது.
அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டத்தினை முன்னிறுத்தகூடிய சூழல் அமையவில்லை. கடந்த நான்கு வருடங்களாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியை போலவே தமிழ் இனம் இருந்து வந்தது.
தவறான ஊசிகளை செலுத்தி அந்த நோயாளியை அழித்து விடவேண்டும் என்ற வகையிலேயே கோட்டாபயவின் ஆட்சியிருந்தது. பல இடங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை முன்னெடுத்தார். தொல்பொருள் என்ற போர்வையில் புதிதாக விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
Post A Comment:
0 comments so far,add yours