( வி.ரி. சகாதேவராஜா)

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  
சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் இன்று (16) புதன்கிழமை காலை  நடைபெற்றது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இவ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாறையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பில்  போட்டியிடும் 
கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராஜா ,சபாபதி  நேசராசா,  கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை , கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்,  சிந்தாத்துரை துரை சிங்கம், சுப்பிரமணியம் தவமணி, தியாகராஜா கார்த்திக் ,ராஜகுமார் பிரகாஷ் ,செல்லத்தம்பி புகனேஸ்வரி, பாலசுந்தரம் பரமேஸ்வரன் ஆகியோர்  சுயஅறிமுகம் செய்து உரையாற்றினர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours