அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பு, அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்காக இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளேன்: அனைவரும் சிந்தித்து செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு
அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்
தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான
சோ.புஸ்பராசா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
ஏனைய
மாவட்டங்களைவிடவும் அம்பாறை மாவட்ட அரசியல் சூழ்நிலை வித்தியாசமானது.
இங்கு தமிழர்கள் ,சிங்களவர்கள், முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இங்குள்ள
தமிழர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக உள்ளார்கள். திருகோணமலையும் இதே
நிலைதான். அதிலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர் நோக்கும்
நெருக்கடிகளும், சில இனவாத இஸ்லாமிய அரசியல்வாதிகளால் எதிர்நோக்கும்
இன்னல்களும், அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்புக்களும், அடிப்படை உரிமைகள்
மறுக்கப்படுவதும் யாவரும் அறிந்த விடயமே.
தமிழ்
மக்கள் ஏனைய இனங்களுடன் சமமாக சகோதரத்துடன் வாழவே விரும்புகின்றனர்.
ஆனால், சில இனவாத இஸ்லாமிய அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் அம்பாறை
மாவட்டத்தில் தமிழ் மக்களின் கலை கலாசார விழுமியங்களை அழிக்கும்
செயற்பாடுகளையும் தமிழரின் வளங்களை சுரண்டும் செயற்பாடுகளையும் கைவிட்டதாக
இல்லை. இதற்கு சான்றாக பல தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள்
விரட்டப்பட்ட வரலாறுகளும் படுகொலைகளும் உள்ளன. தற்போதும் மதமாற்றங்கள் நில
ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து கொண்டு உள்ளமை கவலையானதே. இதற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்றார்.
மேலும் அவர் கூறுகையில்...
கல்முனை
வடக்கு பிரதேச செயலகத்தில் அரச சேவையை பெறுவது இந்த பிரதேச மக்களின்
அடிப்படை உரிமை. இதனைக்கூட முழுமையாக பெறுவதற்கு முட்டுக்கட்டையாக நிருவாக
பயங்கரவாதம் நிகழ்வது இனியும் தொடரக்கூடாது. அனைவரும் இந்த நாட்டின்
பிரஜைகளே அரசாங்கத்துடன் பேரம் பேசி எமது அடிப்படை உரிமையை பெறுவது நிருவாக
தடங்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எமது மக்களின் கலை கலாசாரம் பண்பாடு
விழுமியங்களை இருப்பை அம்பாறை மாவட்டத்தில் பாதுகாக்க வேண்டியது எமது
கடமையாகும்.
வருங்கால
சந்ததியினருக்கு எமது இருப்பை அடையாளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டியதும்
நாம் எல்லோரினதும் கடமையாகும். இதுவே இன்றைய இளைஞர்களினதும் அவாவாகவும்
உள்ளது.
ஏனைய சமூகங்களுடன்
சமத்துவமாக வாழ்ந்த தமிழ் சமூகம் ஏனைய சமூகங்களால் பாதிக்கப்பட்டு இன்று
அரசியல் அநாதைகளாக இருப்பதற்கு யார் பொறுப்பு?
இந்த
நிலை இனியும் தொடரக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நடைபெறவுள்ள
பொதுத் தேர்தலில் உங்களில் ஒருவனாக நான் களத்தில் இறங்கியுள்ளேன்.
நான்
கடந்த 12 வருடங்களாக அரசியல் பலம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் எனது
சக்திக்குட்பட்டு பல நில ஆக்கிரமிப்புக்களை உரிய நகர்வுகள் மூலம்
தடுத்திருந்தேன். இதற்கு பக்க பலமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்விச்
சமூகமும் புத்திஜீவிகளும் பொது அமைப்புக்களும் விவசாயிகளும் பால்
உற்பத்தியாளர்களும் இருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்காகவே எமது
அம்பாறை தமிழ் மக்களுக்கெதிரான ஆக்கிரமிப்புக்களுக்கு நிரந்தரமான ஒரு
தீர்வைக்காண இந்த தேத்தலில் புஸ்பராசாவாகிய நான் முகம் கொடுத்துள்ளேன்.
எமது
இருப்பை பாதுகாத்து நாளைய தலைவர்களான இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
அதற்கான இந்த கள முயற்சிக்கு ஒற்றுமையாக அனைவரும் என்னுடன் இணையுமாறு
அன்புடன் அழைக்கின்றேன்.
நாங்கள்
இன்னொரு சமூகத்தின் இருப்பையோ கலை கலாசாரங்களையோ அபகரிக்கவில்லை.
அபகரிக்கப்போவதும் இல்லை. சில இனவாத அரசியல்வாதிகள் எமது கலை கலாசாரங்கள்
மீது அச்சுறுத்தல் செய்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை இனவாதத்தை
தோற்றுவித்து அரசியல் செய்ய ஒரே மொழி பேசுகின்ற இஸ்லாமிய சகோதரர்கள்
இடமளிக்க கூடாது.
எங்களது மக்களின் இருப்பை
பாதுக்காக்கவும் சமூக கட்டமைப்பை வளப்படுத்தவும் எப்போது தடைகள் வருகிறதோ
இந்த தடைகளை உடைத்தெறியும் சக்தி எம்மிடம் இருக்க வேண்டும.;
இளைஞர்களே
இந்த சமூகத்தின் வழிகாட்டிகளாக வேண்டும். அம்பாறை மாவட்ட பிரஜை எனும்
ரீதியில் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இளைஞர்கள் தீர்க்கமான முடிவெடுத்து
கடந்த கால தேர்தல்களில் விட்ட பிழைகளை விடாது ஒற்றுமையாக அம்பாறை
மாவட்டத்தின் நிலையில் எவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர் வர வேண்டும் என்று
நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours