( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை
தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் தவிசாளருமான
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மதத்தலைவர்களின்
ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது.
முதலில்
வேட்பாளர் ஜெயசிறில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர்
ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களிடம் சென்று இராமகிருஷ்ண
ஆலயத்தில் ஆசீர்வாதத்தை பெற்றார்.
பின்னர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்களிடம் ஆசி பெற்றார்.
காரைதீவு எய்ம்ஸ் தேவாலய போதகர் கிறிஸ்டோபரிடம் ஆசிர்வாதம் பெற்று ஆரம்பமானது இந்த தேர்தல் பிரச்சாரம்.
Post A Comment:
0 comments so far,add yours