மாளிகைக்காடு செய்தியாளர்

இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் அதனோடு இணைந்த 4 ஆசிரியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து  உருவாக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எம். சபீஸ் அவர்களை எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு வழங்கி அவரை வெற்றி பெற வைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


அது தொடர்பான கலந்துரையாடல் கிரீன்வில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் ஒய்வு பெற்ற அதிபர் ஏ.பி. கமால்தீன்,  எங்கள் தொழிற்சங்கம் உருவாக்கிய கட்சி நாட்டின் பலபகுதிகளில் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் சிறு தவறு காரணமாக எங்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால் தொடர்ச்சியாக  கல்விப்புரட்சிக்காவும், மக்களின் உன்னதமான வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் அயராது பாடுபடும் சபீஸ் அவர்களின் செயல்பாடுகளை கடந்த 2 வருடமாக பார்த்துக் கொண்டு வருகிறோம்

அவர் எல்லா குழந்தைகளும் தனது தகுதிக்கேற்ப பட்டப்படிப்பினை 20 வயதுக்குள் நிறைவு செய்யும் திட்டம் உருவாக்கப்படல் வேண்டும். அவர்கள் தமது முயற்சியின் மூலம் தொழில்களை உருவாக்கி பலருக்கு தொழில் வழங்குபவர்களாக மாற வேண்டும் என்று  அயராது பாடுபடுகிறார். அதற்காக எங்கள் கட்சி அதில் உள்ள ஆசிரியர்கள், கல்விமான்கள் அனைவரும் திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எம். சபீஸ் அவர்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம்.  மக்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கின்றது என்று கூறினார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours