( வி.ரி. சகாதேவராஜா)
சர்வதேச
சிறுவர் தினத்தையொட்டி காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் இன்று (1)
செவ்வாய்க்கிழமை சிறுவர் தினக்கொண்டாட்டமும் பாண்ட் வாத்திய கருவிகள்
அன்பளிப்பு நிகழ்வும் அதிபர் சீ.திருக்குமார் தலைமையில் சிறப்பாக
நடைபெற்றது.
அவுஸ்திரேலியா
காரைதீவு மக்கள் ஒன்றியம் ஒஸ்கார் அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன்(
ராஜன்) தலைமையிலான வீரக்குட்டி குடும்பத்தினர் பாண்ட் வாத்திய கருவிகளை
அன்பளிப்பு செய்துள்ளனர்.
முன்னதாக வரலாற்றில் முதல் தடவையாக பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ
அதிதிகளாக ஒஸ்கார் அமைப்பின் சார்பாக ஓய்வு நிலை உதவிக் கல்விப்
பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஓய்வு நிலை வங்கி முகாமையாளர்
இ.தவராசா ஆசிரியர்களான இ.ரத்னகுமார் கே.லோகநாதன் ஆகியோர் கலந்து
சிறப்பித்தார்கள்.
பாடசாலை இணைப்பாளர் திருமதி சோதீஸ்வரி கமலநாதன் ஆசிரிய ஆலோசகர் ரி.சிவநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாண்ட் வாத்திய கருவிகள் அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours