நேற்றைய தினம் 12.10.2024 களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபையினருடனும் மற்றும் பட்டிருப்பு கிராம விளையாட்டுக் கழகங்கள், ஆலய நிர்வாகங்கள், பாலர் பாடசாலைகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் அனைத்து மக்கள் நிர்வாகங்களையும் சேர்ந்தவர்களிடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஒட்டுமொத்த களுவாஞ்சிகுடி பிரதேசமும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், இரா. சாணக்கியன் அவர்களின் பாரிய வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாகவும் தீர்க்கமான முடிவெடுத்தனர். அத்தோடு களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபையானது ஏனைய கட்சிகளுக்கும் அவ் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை என ஏகமனதாக தனது தீர்மானத்தை கூட்டத்தின் போது உறுதிபட கூறப்பட்டது.
Home
உள்நாட்டுச் செய்திகள்
சாணக்கியனின் வெற்றிக்கான முழு ஆதரவையும் வழங்கியது களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபை.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours