நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் வடகிழக்கில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்கின்ற தமிழரசுக்கட்சி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று இந்தநாட்டிலே பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களது கையில் இருக்கின்றது ஆகையால் தமிழரசுக்கட்சியையும் வீட்டுச் சின்னத்தினையும் பலப்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாகும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவத்தார்
மட்டக்களப்பு
மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் துறைநீலாவணையில் உள்ள
வட்டாரக்கிளை உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான
சந்திப்பு சனிக்கிழமை 26 ஆம் திகதி இரவு இடம்பெற்றது
வட்டாரக்கிளையின்
தலைவர் த.கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் தமிழரசுக்கட்சியின்
பிரதேசசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் மு.தேவரெட்ணம் மற்றும் முன்னாள்
பிரதேசசபை உறுப்பினர் வினோ உட்படவிளையாட்டுக்கழகங்களின் ; பிரதிநிதிகளும்
கலந்து சிறப்பித்தனர்
அவர் மேலும் பேசுகையில் திசைகாட்டி நடைபெறவுள்ள
தேர்தலில் பெரும்பான்மையினைப் பெறாத நிலை ஏற்பட்டால் ஆட்சியினை அமைப்பதில்
சிங்கல் நிலை இருக்கின்றது. திருடர்களையோ அல்லது கொலைகாரர்களையோ
கற்பழித்தவர்களையோ சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று திசைகாட்டியினர்
கூறுகின்றனர் அவ்வாறானால்; வடகிழக்கில் தமிழரசுக்கட்சியினைத் தவிர வேறு
எந்தக்கட்சியும் நேர்மையான கட்சியாக இருக்காது என்பதனால்
தமிழரசுக்கட்சியின் உதவியினை நாடி வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இந்நிலையில் தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாறி எமது தேவையினைப்
பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமையும் என்பதனால்
வடக்குக்கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்தினைப்
பலப்படுத்துவதனால் பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருப்போம் அதன் ஊடாக
தமிழ் மக்களுக்கான மூன்று விடயங்களை முன்வைத்து பேசமுடியும்
குறிப்பாக
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்ற தமிழ் மக்களின் அரசியல் தீவு
விடயம் இதனை பேரம் பேசுவதனால் சிறுமுன்னேற்றத்தினை அடைய முடியும்
அதேபோன்று கொல்லப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
கடத்தப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி போன்ற
விடயங்களை எம்மால் முன்வைத்து பேச முடியும் என்றார்
Post A Comment:
0 comments so far,add yours