சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர்மு.விமலநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) இடம்பெற்றது.
இதில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகம் மற்றும் தாய்ச்சங்க உறுப்பினர் க.கஜேந்திரன் (கஜன்) மற்றும் கிழக்கு கிளையின் நிருவாகசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அமைப்பின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours