பல சமூகசேவை அமைப்புக்களில் இருந்து மக்களுக்கு சேவையாற்றிவரும் இவர் தனது கொள்கைப் பிரகடனத்தினை வெளீயிட்டுள்ளார்
1) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பூரணப்படுத்துதல்.
2)கல்முனை,சம்மாந்துறை வலயங்களில் உள்ள தமிழ்ப்பாடசாலைகளை ஒன்று சேர்த்து புதிய கல்வி வலயம் ஒன்றை அமைத்தல்.
3)கல்முனையில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்கள் மேலும் வளரச்செய்வதற்கு கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைத்தல்.
4)அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினது கட்டுமானத்திலும் ,நிதி வளத்திலும் ,மனித வளத்திலும் மேலோங்கச் செய்தல்.
5)கல்முனையில் கல்முனை வடக்கு வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல் .அதற்குத் தேவையான கட்டுமானங்களையும் மனித வளத்தையும் அதி விசேட சிகிச்சை நிபுணர்களையும் கொண்ட சிறந்த வைத்தியசாலையாக உருவாக்குதல் .மற்றும் திருக்கோவில் வைத்தியசாலையை கல்முனை வைத்தியசாலையின் தற்போதைய தரத்திற்கு தரம் உயர்த்துதல்.
6)அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் பிரதேச செயலகங்கள் , பிரதேச சபைகள் உண்டு. அப் பிரதேசங்களில் உள்ள பாதைகள், வீதிகள் , வடிகான்களை புணரமைத்தலும் மீள் நிர்மாணம் செய்தலும், வீதி விளக்குகளை நிர்மாணித்தலும்.
7)கல்முனை , பாண்டிருப்பு பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதை அம்மன் ஆலயம் , திருக்கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திர வேலாயுதர் முருகன் ஆலயம்
மற்றும் வீரமுனை யில் பிரசித்தி பெற்ற சிந்தயாத்திரை பிள்ளையார் ஆலயம் போன்றவற்றிக்கான அலங்கார வளைவுகளை பெரும்வீதியில் அமைத்தல் .
8)தமிழர் பிரதேசங்களில் உள்ள காணிகளுக்கான குளங்களை புனரமைத்து கொள்ளல்.
9)அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,நாவிதன்வெளி ,சம்மாந்துறை, திருக்கோவில், தம்பிலுவில்,பொத்துவில் மற்றும் ஆலையடி வேம்பு போன்ற பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பேட்டைகளை அமைத்து கொடுத்தல்.
10)எமது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரிகள் பட்டப்படிப்பின் பின்பு அகில இலங்கை சேவையினுள் உள்வாங்கப்படுவதற்கான பயிற்சி நெறிகளை வழங்கும்முகமாக அதற்குரிய பூரண கல்வி நிலையம் ஒன்றை உருவாக்குதல்.
11) சாதாரண தர மற்றும் உயர் தர கற்கையிலிருந்து இடை விலகும் மாணவர்களுக்காக கட்டிட நிர்மாண துறையில் பயிற்சிகளை வழங்கும் நிலையங்களை அமைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தயார்படுத்தல்.
12) தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய வயல் , அரச காணிகளை மீளகையகப்படுத்தல்.
13) கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் உள்ள நகரில் வசிப்பவர்களோ அல்லது இந் நகரில் பிறந்தவர்களோ அரச திணைக்களத்தில் அல்லது நிறுவனங்களில் நிறைவேற்றுத் தரத்திலும் தலைமைப்பதவியிலும் இருப்பதினை குறைத்தல்.
14) அம்பாறை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் E-Library ஐ அமைத்தல்
15) நன்னீர் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடிகளை அவிவிருத்தி செய்தலும் நவீனமயப்படுத்தலும்
16) அம்பாறை மாவட்ட தமிழ்க்கிராமங்களின் கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களையும் அவர்களுடைய நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்
17) அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க்கிராமங்களில் சுற்றாடலின் சுகாதாரத்தை பேணுவதோடு சுற்றுலா துறையை விருத்தி செய்து அதன் மூலம் வருமானம் பெறல்.
18) வீரமுனை தொடக்கம் துறைநீலாவணை வரையான கிட்டங்கி வாவியை சுற்றுலாத் துறையில் மேம்பட அபிவிருத்தி செய்தல்.
Post A Comment:
0 comments so far,add yours