இ.சுதாகரன்


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர் மகாவித்தியாலயத்தில் உதவும் கரங்கள் அமைப்பினரின் நிதிப்பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையானது வெள்ளிக்கிழமை இன்றைய தினம் (11) முற்பகல்10 மணியளவில் பாடசாலையின் முதல்வர் திரு. ரி.புத்திசீகாமணி தலைமையில்  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.சி.சிறிதரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் திருமதி வனிதா சுரேஸ் மற்றும் பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் திரு இளந்திரையன், மண்டூர் இராம கிருஸ்ணமிசன் வித்தியாலயத்தின் அதிபர் சத்தியமாறன், மண்டூர் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு.க.தம்பிப்பிள்ளை மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எஸ்.பாஸ்கரன் உட்பட உதவும்  கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள்,கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்கள், பழைய மாணவர்கள்,பெற்றோர், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இதன்  போது பாடசாலையில் உளநல தினத்தினை முன்னிட்டு சித்திரக்கலைக் கண்காட்சி மற்றும் மரநடுகை  நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours