சுனாமிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரியநீலாவணை 1 கிராமசேவகர் பிரிவில் பின்லாந்து அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு 625 குடும்பங்கள் வசித்துவரும் இத்தொடர்மாடிகளில் கழிவுநீர் மற்றும் மலசலகூடக் கழிவு என்பன மலசலகூடக் குழிகளில் இருந்து வெளியேறி வீதிகளிலும் தொடர்மாடிக் கீழ்பகுதிகளிலும் தேங்கிக்கிடந்ததுடன் இதனை யாரும் கவனிக்காத நிலையில் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதார சீர்கேடாக இருந்துவந்துள்ளது.
அதேவேளை அக்குடியிருப்புப் பகுதிகளில் சமூகஆர்வலர் ஒருவரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச வகுப்புக்கள் நடைபெற்றுவருவதுடன் இவ்வகுப்புக்கு வருகின்ற மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அவ்வழிகளால் பிரயாணம் செய்வதுடன் இச் சுகாதார சீர்கேட்டினால் சிறுவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகிவருவதாக பெற்றோர்கள் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் அவர்களிடம் விடுத்தகோரிக்கைக்கு இணங்க கல்முனை மாநகரசபையின் ஒத்துழைப்புடன் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அவ்விடத்தில் நின்று அப்பிரதேசத்தினை தூய்மைப்படுத்தும் வேலையினை ஆரம்பித்துள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours