காரைதீவைச்
சேர்ந்த சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மயில்வாகனம் வரதராஜன்
தனது 60 வது வயதில் 32 வருட கால அரச சேவையில் இருந்து இன்று(14.11.2024)
ஓய்வு பெறுகிறார் .
இவர் 1992 ஆம் ஆண்டு கொழும்பு ஆட்பதிவுத் திணைக்களத்தில் இலிகிதராக இணைந்து ஒன்பது வருடங்கள் பணியாற்றினார் .
அதன்
பின்பு அம்பாறை மாவட்ட செயலகம் காரைதீவு பிரதேச செயலகம் நிந்தவூர் பிரதேச
செயலகம் ஆகிய இடங்களில் 23 வருடங்கள் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமை
ஆற்றினார்.
ஆரம்பக்
கல்வியை ராமகிருஷ்ணசங்க ஆண்கள் பாடசாலையிலும் பின்னர் விபுலானந்த மத்திய
கல்லூரியிலும் மற்றும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி
பயின்றார்.பெற்றவராவார்.
இலங்கை முகாமைத்துவ சேவையின் முதலாந்தர உத்தியோகத்தராவார்.
காரைதீவு
விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றம் இந்துசமய விருத்திச்சங்கம் உள்ளிட்ட பல
அமைப்புகளில் இயங்கி வரும் முன்னணி சமூக செயற்பாட்டாளராவார்
Post A Comment:
0 comments so far,add yours