(  வி.ரி.சகாதேவராஜா)
 அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (27 ) புதன்கிழமை மாலை நினைவேந்தல் நிகழ்வு எழுச்சியுடன்  உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 

 858 மாவீரர்கள் துயிலும் இல்லத்திற்குப் பொறுப்பான 
அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின்
தலைவர் 
சின்னத்தம்பி சுப்பிரமணியம் 
செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை( குட்டிமணி மாஸ்டர்) ஆகியோரும் பணிக்குழுவினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏகே. கோடீஸ்வரன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமூக செயற்பாட்டாளர்களான டாக்டர் ஜெயம்,முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், முன்னாள் பொத்துவில் உப தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், சமூக செயற்பாட்டாளர் கணேஸ், பவா அண்ணன்
ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் ஆயிரம் மாவீரர் பெற்றோர்கள் கலந்து கொண்டு சரியாக மாலை 6. 05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தலை உணர்வு பூர்வமாக நடாத்தினர்.

செல்லும் வழியில் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பு படையினரால் பதிவு செய்யப்பட்டன.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours