( வி.ரி.சகாதேவராஜா)


ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராசாவின் தேர்தல் அலுவலகம் ஆலையடிவேம்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.


இதில் ஆலையடிவேம்பு பாற்பண்ணையாளர்கள், பொதுமக்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு வேட்பாளர் புஸ்பராசாவுக்கு வரவேற்பையும் ஆதரவையும் வழங்கினர்.


கலந்து கொண்ட பொதுமக்களினால் , அம்பாறை மாவட்த்தில் பலராலும் அறியப்பட்ட இவர் ,தனக்கு பதவிகள் இல்லாதபோதும் இனவாத முஸ்லிம் அரசியல்வாதிகளினால் சுரண்டப்படும் பல தமிழர் வளங்களை விளப்பரங்கள் இல்லாது காப்பாற்றிய ஆளுமைக்குதான் எமது ஆதரவு என கோஷம் எழுப்பியிருந்தனர்.
உதாரணமாக சுமார் 4800 ஏக்கர் வட்டமடு மேச்சல்தரையை மீட்டுக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சக வேட்பாளர் சு.தவமணியும் பங்குபற்றியிருந்தார்.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours