தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 23ஆம் திகதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் ஏதுநிலை உள்ளதாக, இலங்கையின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்பின்னரான, 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரக்கூடும் என்றும் வானிலை மையம் எதிர்வை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் செயற்படும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள், குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள், இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours