நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுகின்ற தமிழ்க் கட்சிகளில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது கிழக்குமாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கின் அபிவிருத்தியை நோக்கிப்பயணிக்கும் கட்சியே தவிர ஏனைய கட்சிகளைப்போன்று வடக்கின் நிகழ்ச்சி நிரலுக்கு இயங்கும் கட்சியல்ல என்பதனை எமது மக்கள் புரிந்துகொண்டு இத்தேர்தலில் வாக்களித்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை ஆதரிப்பதுடன் அதன் தலைவர் சிவ சந்திரகாந்தனது கரங்களைப் பலப்படுத்தி பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாகும் என ; திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் படகுச் சின்னத்தில் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ஓய்வுநிலை பொறியியலாளர் சமூகசெயற்பாட்டாளர் தேவராசா சர்வானந்தா தெரிவித்தார்
; நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் படகுச் சின்னத்தில் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ஓய்வுநிலை பொறியியலாளர் சமூகசெயற்பாட்டாளர் தேவராசா சர்வானந்தா அவர்களை ஆதரிக்கும் கூட்டம் சேனைக்குடியிருப்புக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பிரதேச இளைஞர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது அப்பிரதேச இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
அவர்மேலும் தெரிவிக்கையில் கடந்தகாலங்களைப் பார்க்கின்றபோது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளார் அதற்கான காரணம் அவர் மக்களின் அபிவிருத்திப்பாதையினை நோக்காகக் கொண்டு ஆட்சியில் வரும் அரசுக்கு ஆதரவு வழங்கி மக்களின் தேவைகளைப்பூர்த்திசெய்துவந்துள்ளதுடன் ஏனைய தமிழ்க்கட்சிகள் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்களைத்தலைவர்களாகக்கொண்டு அவர்களது நிகழ்ச்சிநிரலுக்கு அமையத் தீர்மானம் எடுப்பதுடன் தன்னிச்சையாக எதனையும் எடுக்கமுடியாதவர்களாக இருக்கின்றனர்
கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் தோல்வியுற்றநிலையில் கட்சியின் செயலாளராக கிழக்குமாகாணத்தவர் ஒருவர் இருந்தமையினால் தேசியப்பட்டியல் அம்பாரைக்குக்கிடைத்தது ஆனால் இப்போது அது சாத்தியமல்ல என்பதனை உணர்ந்து எமது மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினைப்பலப்படுத்தி தேசியல் பட்டியல் பிரதிநிதித்துவத்தை திகாமடுல்ல மாவட்டத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துவதுடன் திகாமடுல்லமாவட்டம்மட்டுமல்ல கிழக்குமாகாண மக்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு பேரம் பேசும் சக்தியாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இருப்பதற்கு எதிர்வரும் 14 ஆம் திகதி படகுச்சின்னத்திற்கும் 5 ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours