( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கர்புரத்தில் முன்மாதிரி துண்டமாக செய்கை பண்ணப்பட்ட சோயா மற்றும் சேதன மரக்கறிகளின் அறுவடையும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும்  நேற்று நடைபெற்றது.

றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிற்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் திருமதி துஷ்யந்தி ஜதீஸன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி சுகன்யா திருமதி நித்தியா நவரூபன் விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சங்கர்புரத்தில் முன்னோடி விவசாயியான வைரமுத்துவுக்கு விவசாய திணைக்களத்தினால் சோயாவில் 3 வகையான இனங்கள் வழங்கப்பட்டது.
 முன்மாதிரி துண்டமாக அதனை சிறப்பாக செய்கை பண்ணி அதன் அறுவடையும் சேதன வீட்டுத்தோட்டத்தில் செய்கை பண்ணிய கத்தரி புடோல் அவரை போன்றவற்றின் அறுவடையோடு சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் யானை வேலி பயன்படுத்தும் முறை புடோலுக்கு ஏற்படுத்தும் பழ ஈயை கட்டுப்படுத்தும் முறைகள் செய்து காட்டல்கள் விவசாய போதனாசிரியர்களால் செய்து காட்டப்பட்டது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours