( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை
மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாபெரும்
சிரமதானமொன்று நேற்று (12) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு இந்த ஏற்பாட்டை செய்தது.
பணிக்குழுவின் தலைவர்
சின்னத்தம்பி சுப்பிரமணியம் மற்றும்
செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் பங்குபற்றுதலில் மாவீரர் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அம்பாறை
மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில்
பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours