மாட்டுப்பள்ளை
பிரதேசத்தில் உடைந்து கீழே இறங்கி இருந்த பாலத்தை இந்த ஊர் பிரதேச
செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகள் திகாமடுள்ள மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நானும் இணைந்து தற்காலிகமாக
செப்பனிட்டு போக்குவரத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
இப்போக்குவரத்து
பாலத்தினை நிரந்தரமாக மீள அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கத்துடன் பேசி
நான் மேற்கொள்வேன் என திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா
தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
இப்பாலத்தை தற்காலிகமாக போக்குவரத்துக்காக பயன்படுத்தக்கூடியவாறு செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியாகி இருக்கின்றன.
திகாமடுள்ள
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசாங்கத்தோடு பேசி
அதனை நிரந்தரமாக புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முயற்சிகளை
மேற்கொள்வேன்.
ஏற்பட்ட
வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகளின் விவசாய நிலங்கள்
பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களின் உற்பத்தி நடவடிக்கைகளையும்
மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இவை
அனைத்தையும் நான் அரசாங்கத்தோடு பேசிய அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க
முயற்சிப்பேன் என்றும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours