எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு



பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன்!

நாளை இடம் பெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லையெனவும், மாவட்டத்தில் 233 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக இன்று (13) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல்  தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி ஜெஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.

நாளை காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் உரிய நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 442 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் நாளைய தினம் வாக்கெண்னும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மாவட்டத்தில்  கல்குடா தேர்தல் தொகுதியில் 123 வாக்கெடுப்பு நிலையங்களும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 197 வாக்கெடுப்பு நிலையங்களும்,  பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 122  வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours