( வி.ரி.சகாதேவராஜா)

இன்று மின்சாரம் தாக்கி மரணித்த இளைஞனை திருக்கோவில் ஆதரவைத்தியசாலை பிரேத அறையில் வைப்பதற்கு குளிரூட்டி இல்லை. இன்னும் இன்னும் பணத்திற்கு தமிழ் மக்கள் சோரம் போனால் இவ்வாறான அவலங்கள் தொடரும் .
பிணத்தைக் கூட பாதுகாக்க முடியாத அவலநிலை தோன்றும்.

இவ்வாறு ,இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் ,காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  நேற்று திருக்கோவில் பிரதேச குடிநில மக்களுடன் உரையாடுகையில் தெரிவித்தார் .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ..

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் மிகவும் அவலமான நிலையில் இருக்கின்றன. அரச மாற்றின அரச பயங்கரவாதத்தின் விளைவே இது.பொத்துவில் தொடக்கம் தம்பட்டை வரையிலான பெருநிலப்பரப்புக்குரிய ஒரே ஒரு சுகாதார சேவை வழங்கும் வைத்தியசாலையாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை திகழ்கிறது .  25 டாக்டர்கள் இருக்க வேண்டிய வைத்தியசாலையில் இன்று ஆக 6  டாக்டர்கள் கடமை ஆற்றுகிறார்கள். பிரேத அறைக்கு குளிரூட்டி இல்லை. இடையிடையே அன்புலன்ஸ் பழுது.
 இவ்வாறு பல குறைபாடுகள் இருக்கின்றன. இந்த ஏழை மக்களுக்கு சுகாதாரசேவை செய்ய வேண்டிய வைத்தியசாலையின் அவலத்தை பாருங்கள். முன்பிருந்தவர்களும் சரி இன்றும் சரி அதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினரானால் முதலில் இந்த வைத்தியசாலையை நிச்சயம் கவனிப்பேன்.

தேர்தல் வந்தால் பணத்தின் பின்னால் அலையும் கொள்கை இல்லாதவர் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊரையே காட்டிக் கொடுப்பார்கள்.

தமிழன் தமிழரசு கட்சியின் பக்கம் சாயாமல் வேறு கட்சியின் பக்கம் எதற்காக சாய்
கிறான் என்ற உண்மை இந்த பணம் தான்.

இதனை மக்கள் அறிந்தும் அறியாமல் இருக்கின்றீர்களா என்னவென்பது உண்மைக்கு புறம்பாகவே உள்ளது.
 நான் நினைக்கின்றேன் தமிழரசு கட்சியின் பக்கம் சாய்ந்தால் பணம் கிடைக்காது. அதன் அடிப்படையில் மாற்றுக் கட்சியின் பக்கம் சாய்ந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பதற்காக .
மக்களை ஏமாற்றும் கூட்டம் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது .நீங்கள் உதாரணமாக சிந்தித்துப் பாருங்கள் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கட்சியின் பின்னால் முக்கியமான பெரும் தலைகள் கூட்டம் கூட்டமாக மக்களின் மண்டையை கழுவி ஏமாற்றுகிறார்கள். பொக்கட்டை நிரப்புகிறார்கள்.
 அந்த வகையில் தமிழரசுகட்சி எந்த பணத்திற்காகவும் எவர்பக்கமும் சாயவில்லை .தமிழ் இனத்தின் விடிவுக்காக கொள்கை மாறாமல் திடமாக நிற்கின்றார்கள். உண்மையில் தமிழ் மக்களாகிய நாங்கள் எப்பயாவது ஒரு கணம் ஆலோசித்து பார்த்ததுண்டா?
 தேர்தல் முடிந்தால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் முடிந்துவிட்டது. பாமர மக்களை ஏமாற்றும் மாற்றுக் கட்சிக்கு துணை போகும் ஆதரவாளர்கள் பணத் தொகையை பெற்றுக்கொண்டு காலாகாலம் தொட்டு ஏமாற்றி வருகின்றார்கள். இதில் பல குற்றச்சாட்டுகள் தமிழரசு கட்சியின் மீது வைக்கின்றார்கள். செய்த தவறுகள் அனைத்தும் அவர்களே.. தமிழரசு கட்சியானது ஒரு நோக்கத்தோடு இம்முறை களம் இறங்கி இருக்கின்றது. குறிப்பாக எமது மக்களின் அபிவிருத்தி காலம் கடந்த போதிலும் அபிவிருத்தியை காணாத மக்கள் எதிர் வருகின்ற 15-ம் திகதிக்கு பிற்பாடு இதுவரை காலமும் நடக்காத அபிவிருத்தியை தமிழரசு கட்சியின் ஊடாக மக்கள் பயன்பெறுவார்கள். இது மறுக்க முடியாத உண்மை. காத்திருப்போம். தமிழரசு கட்சியின் வெற்றியை நோக்கி..என்றார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours