(   வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட தமிழர்களது வாக்குகளை வீணாக்க, வீணாய்ப் போன சிலர் வீணையில் வந்திருக்கிறார்கள்.
பணத்திற்கு ஜால்ரா அடிக்கும் அவர்களை விரட்டுங்கள்.

இவ்வாறு சொறிக்கல்முனையில் இடம் பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை  மாவட்ட வேட்பாளரும், முன்னாள் காரைதீவு தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

குறித்த கூட்டம் நேற்று மாலை சொறிக் கல்முனையில்  சமூக செயற்பாட்டாளர் அனுசியா தலைமையில்  ஜெயகாந்தன் பிரசன்னத்தில்  நடைபெற்றது.

 அங்கு அவர் மேலும் பேசுகையில் .

வென்றாலும் தோற்றாலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவேன் என்று கூறி கடந்த தேர்தலில் 15 சபாரியில்  வந்தார் கருணா . என்ன நடந்தது? அன்று போனவர் போனவர் தான். சபாரியுமில்லை. ரயருமில்லை. அவரும் இல்லை

விளைவு 
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது.

இம்முறை அதே பாணியில் 588 கோடி ஊழலுடன் 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் வலம் வருகிறார் ஒருவர்.
கடந்த காலங்களிலே இடம்பெற்ற கொரோனா மற்றும் வெள்ள நேரங்களில் இவர்கள் எங்கு சென்றார்கள்? எங்கே இந்த 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்? சிந்தியுங்கள்.

அம்பாறைச் சங்கிலிருந்து ஒருபோதும் சத்தம் வராது. இந்த தேர்தலின் களநிலைவரம் அறிந்தவர்களுக்கு அது விளங்கும்.
சங்கு ஒருபோதும் வரப் போவதில்லை.
எனவே, சொந்தம் பந்தம் என்று சங்குக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.
தேர்தல் காலத்தில் அரிசி வரும் சீனி வரும் சாராயம் வரும் வாங்கி அனுபவியுங்கள். 
தேர்தல் முடிந்ததும் இவை எதுவுமே வராது
. அவர்களும் வரமாட்டார்கள்.

ஆனால் நாம் வருவோம்.
 நிச்சயமாக வீடு வெல்லும். பொதுவாக ஓடும் குதிரைக்குத்தான் காசைக் கட்டுவார்கள் . அதுபோல தெரிவாகும் வீட்டுக்கு வாக்களியுங்கள் .வாக்களித்தால் மட்டுமே எமது வாழ்க்கை வளமாகும்.

சிலர் கப்பலில் வருவார்கள். பின்னர் சைக்கிளில் வருவார்கள்.பின்னர்  படகில் வருவார்கள். இனிப் போக கட்சியே இல்லை என்ற நிலையில் இப்போது வீணாய்ப் போன சிலர் வாக்குகளை வீணாக்க வீணையில்  வந்திருக்கிறார்கள்.
அவர்கள் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்  முதல் அனைவருக்கும் என்ன செய்தார்கள் என்பதை உலகறியும். லஞ்சமும் ஊழலும் அவரது தாரக மந்திரம்.
இவர்களது பித்தலாட்டம் 
இம்முறை எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடாது .

தமிழருக்கு தலைவன் காட்டிய சின்னம் வீட்டுச் சின்னம்.
சிலர் வீட்டுக்குள் பிரச்சினை என்கிறார்கள்.
பாரிய கட்சியில் பிரச்சனை வருவது வழமை .
பிரச்சனையை சரி செய்வது எமது திறமை.
எனவே வீட்டுக்கு வாக்களித்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள். என்றார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours