( வி.ரி. சகாதேவராஜா)
ஜனநாயக
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சங்கு சின்னம் இல 10 இல் போட்டியிடும்
சோ. புஸ்பராசா அவர்களை ஆதரித்து பெரியநீலாவணையில் பொதுமக்களாலும்
இளைஞர்களாலும் அமோக வரவேற்புடன் ஆதரவு கூட்டம் (9) சனிக்கிழமை இடம் பெற்றது.
எதிர்வரும்
பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் மாகான சபை
உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராகவும் இருந்த
சோ.புஸ்பராசா அவர்களுக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் பெரியநீலாவணையில் சமூக
செயற்பாட்டாளர் என்.சௌவியதாசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில்
கலந்துகொண்ட வேட்பாளருக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இளைஞர்களும்
இணைந்து அமோக வரவேற்பளித்ததுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours