சா.நடனசபேசன்
புத்தளம் வலயக்கல்வி அலுவலகத்தில் பாட இணைப்பாளராக கடமையாற்றி தனது 40 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மட்டக்களப்பு துறைநீலாவணையினைச் சேர்ந்த மணிவிழா நாயகன் வெள்ளக்குட்டி அருணாகரன் அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் கல்விவலயத்தின் தமிழ்மொழிமூலப் பாடசாலைகளின் ஏற்பாட்டில் ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயத்தில் புத்தள வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.எம்.அர்ஜூன் அவர்களது தலைமையில்; இடம்பெற்றது.
இதன்போது இவரது சேவையினைப் பாராட்டி மணிவிழா நாயகன் எனும் சிறப்பு மலர் நூலாசிரியர் என்.பத்மானந்தன் அவர்களால் வெளியிடப்பட்டது
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் டபிள்யு.பி.எஸ்.கே. விஜயசிங்க உதவிக்கல்விப்பணிப்பாளர் கமலேந்திரன் மற்றும் வலயக்கல்வி அதிகாரிகள் புத்தளம் கல்விவலயத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்
இதன்போது இச் சிறப்பு மலருக்கான ஆய்வுரையினை ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் புஷ்பராசா வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours