இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர் பீடம் நேற்று கூடி வெளியிட்ட தேசிய பட்டியல் தெரிவு பொருத்தமானதல்ல. அது மீளப் பெறப்பட்டு ஒரு
பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச கிளையின் தலைவரும் முன்னாள்
தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் காரைதீவில் (18) திங்கட்கிழமை
இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அல்லது செயலாளர் பதவி கிழக்கு
மாகாணத்திற்கு குறிப்பாக திரு. சாணக்கியனுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
அம்பாறை மாவட்டத்தில் இழந்த பிரதிநிதித்துவத்தை நாங்கள் மீண்டும் நிலைநாட்டியிருக்கின்றோம் . கிழக்கில் ஐந்து ஆசனங்கள் கிடைத்தது.
அதாவது
தமிழ் தேசியம் கிழக்கில் தான் வென்றுள்ளது. வடக்கில் கட்சி தோல்வி
அடைந்தது என்று எமது ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஐயா கூறியிருந்தார். அது
உண்மை.
இலங்கை தமிழரசு
கட்சியினுடைய தேசிய பட்டியல் ஆசனத்தை நேற்று இடம்பெற்ற உயிர் பீடத்தில்
கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் ஐயாவுக்கு வழங்கி
உள்ளார்கள். இது பொருத்தமானதாக இல்லை.
குறிப்பாக இந்த நாட்டில் பால்நிலை சமத்துவம் என்கின்ற அடிப்படையிலே
பெண்களுக்கும் எமது கட்சியினல் ஒரு உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் .
வடக்கு அல்லது கிழக்கில்
அதாவது ஒரு பெண்ணுக்கு அத் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக
இந்த புதிய அனுர அரசாங்கத்தில் 18 பெண்களுக்கு பிரதி நிதித்துவம்
வழங்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவையில் பிரதமராக ஒரு பெண்ணும் மகளிர்
சிறுவர் விவகார அமைச்சராக ஒரு தமிழ் பெண்ணும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஒரு ஆசனம்தான் எங்களுக்கு
கிடைக்கப்பெற்று இருந்தது. ஏனைய கட்சியில் மற்ற ஆசனம். ஆனால் இம்முறை
அங்குள்ள மக்கள்
மூன்று பாராளுமன்ற உறுப்பினரை அமோக
வெற்றியை தந்திருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அங்கு
துடிப்பாக வேலை செய்கின்ற இலங்கை தமிழர் கட்சியின் சாணக்கியன் சகோதரர்
அவர்களும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் எங்களுடைய இலங்கை தமிழர் கட்சி உடைய தேசியத்தை நிலைநாட்டிருக்கின்ற து.
கிழக்கு
மக்கள் சரியானது பாடம் கற்பித்து இருக்கின்றார்கள் .வட கிழக்கை சுத்தம் செய்திருக்கின்றார்கள். கடந்த கால
கடந்த
காலங்களிலே அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டு தங்களுடைய வளர்ச்சியை செய்தவர்கள்
ராஜாங்க அமைச்சர்கள் அமைச்சர்கள் என்று அனைவரையும் சுத்தம் செய்து தூசி
தட்டி ஒரு தூய வடகிழக்கு பிரதேசமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள் .
எனவே நாம் இலங்கை தமிழரசுக் கட்சியில் மேலும் வலுப்பெறக்கூடிய செயற்பாடுகளைசெய்ய வேண்டும் .
இப்போது
தலைமை செயலாளர் பதவிகளை வடக்கிலே வைத்துக் கொண்டிருப்பதை இனியும் எங்களால்
ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக மிக அவசரமாக இலங்கை தமிழரசுக் கட்சி
உயர் பீடம் கூடி
வடக்குக்கு கிழக்குக்கென்று இல்லாமல்
தலைமை எங்களுக்கு முக்கியமான ஒரு பொறுப்பு கிழக்கு மாகாணத்தில்
கிடைக்கப்பெற வேண்டும் .குறிப்பாக அந்த பொதுச்செயலாளர் அல்லது தலைமைப்
பதவி கிடைக்கப் பெற வேண்டும் .
அம்பாறை
மாவட்டத்தில் நானும் இத்தேர்தலில் களமிறங்கி இலங்கை தமிழரசு கட்சிக்காக
அதிகளவான வாக்குகளை பெற்று தோல்வியுற்றிருந்தாலும் இலங்கை தமிழரசு
கட்சியின் வளர்ச்சிக்காகவும் இலங்கை தமிழர் கட்சியின்
முன்னேற்றத்திற்காகவும் முயற்சிகளை செய்து வருகின்றேன். இனியாவது தேசிய
பட்டியல் தொடர்பான விடயத்தை ஆராய்கின்ற போது கிழக்கு மக்களின்
கருத்துக்களையும் உள்வாங்க வேண்டும். வெறுமனே 11 பேர் அல்லது 12 பேர் கூடி
எடுக்கின்ற குழு முடிவுகளை இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். கிழக்கு
மாகாணத்தில் இன்று எமது அயராத முயற்சியினால் தான் தமிழ் தேசியம் கோலோச்சி
காணப்படுகின்றன.
வடக்கில் தமிழரசு கட்சி தோல்வி கண்டிருக்கின்றது
என்பதனை எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள்
தெரிவித்து இருக்கின்றார் இதற்கு காரணம் என்ன என்பதை நாம் பரிசீலனைக்கு
உட்படுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் உங்களை நிராகரித்திருக்கின்றார்கள்.
மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்கள் செயல்பாடு அமையாத காரணத்தினால்
தான் மக்கள் இன்று தமிழரசு கட்சியை தேர்தலில் நிராகரிக்கின்றார்கள்.
உங்களுக்குரிய
பதவிகளை சுயநலமாக எடுப்பதனால் தான் ஏனைய கட்சிகள் எம்மை விமர்சித்து
மக்களிடம் தங்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. கடந்த
காலங்களில் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது பல ஆசனங்கள் இழந்திருப்பதை
நாம் உணர வேண்டும். இதற்கு உதாரணமாக மட்டக்களப்பில் ஆயுத குழுக்கள்
ஒட்டுக் குழுக்கள் இன்றி தமிழரசுக் கட்சி வெற்றி ஈட்டி இருக்கின்றார்கள்.
இதன்மூலம் அப்பகுதி மக்கள் தனித்துவமாக களம் இறங்கி வாருங்கள் என்று
செய்தியை எமக்கு தெரிவித்திருக்கின்றார்கள். இதனூடாக எமக்கு ஆணை வழங்கி
இருக்கின்றார்கள்.
இன்று கிழக்கு மக்கள் தந்த ஆணையை பெற்றுக்
கொண்டு நீங்கள் ஒரு பொதுச் செயலாளராக இருந்து கொண்டு அந்தப் தேசியப்
பட்டியல் பதவியை பெற்றுச் சென்றமை எவ்வாறு நியாயம் ஆகும். எவ்வாறு இதை
நாம் ஏற்றுக் கொள்வது. ஏழு ஆண்கள் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவாக
இருக்கின்ற வேளையில் ஒரு பெண்ணை நியமிக்க ஏன் நீங்கள் எவரும்
சிந்திக்கவில்லை.இப்பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்களை நாங்கள்
கண்ணியமாக பார்க்க வேண்டும். இந்த ஏழு ஆசனங்களையும் பெற்று கொள்வதற்கு பல
பெண்கள் எமக்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு
வாக்களித்திருக்கின்றார்கள்.
அவர்களது வாக்கு பலத்தினை உதாசீனம்
செய்யாமல் நிச்சயமாக இந்த தேசிய பட்டியல் ஆசனத்தில் மாற்றம் கொண்டு வந்து
பெண்களுக்கு வழங்குவது மிக அவசியமாகும். அத்துடன் அவசரமாக தமிழரசு
கட்சியின் தலைவர் அல்லது செயலாளர் பதவி என்பது கிழக்கு மாகாணத்திற்கு
வழங்கப்பட வேண்டும். இதனூடாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற எமது
கட்சியினை சுத்தப்படுத்தி இலங்கை தமிழரசு கட்சியை அனைவரும் சேர்ந்து
பயணம் செய்வதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் .
ஆகையால் இந்த தேசியப் பட்டியல் நிச்சயமாக மாற்றம் செய்யப் பட வேண்டும்.என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours