கொடூரன்
கோட்டாவுக்கு கூஜா தூக்கிய நீங்கள் ஜனாஸா எரிப்பை கிண்டல் செய்கிறீர்களா?
நீங்கள் வெஸ்ட் காமெடியன்தான்.உங்களது கேலிப் பேச்சும் இந்த காமெடி
பேச்சும் செய்ய இது களமில்லை. இது பாராளுமன்ற தேர்தல். நாவை அடக்காவிட்டால்
உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.
இவ்வாறு நல்லாட்சி தேசிய முன்னணியின் ஆதரவு "வி ஆ வண்"( we are one) அமைப்பின் இணைப்பாளர் மொகமட் ரஸ்மின் எச்சரிக்கை விடுத்தார்.
அவரது ஊடகச் சந்திப்பு காரைதீவிலுள்ள அம்பாறை ஊடக மையத்தில் நேற்று(5) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அங்கு அவர் ஆக்ரோசமாக மேலும் தெரிவிக்கையில்...
இலங்கை
வரலாற்றை மாற்றி அமைக்கப் போகும் முக்கியமான தேர்தல் இது. கோட்டபாயவுக்கு
எதிரான அறகல போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த 225 பாராளுமன்ற
உறுப்பினர்களும் வெளியேற்றப்பட வேண்டும் மாறாக புதியவர்கள் வரவேண்டும்
என்றார்கள் .
இதனால் ரணில் மைத்திரி தினேஷ் உள்ளிட்ட 60 பேர் தேர்தலில் இருந்து விலகி விட்டார்கள்.
ஆனால்
நமது இஸ்லாமிய தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீண்டும் களத்தில்
இறங்கியுள்ளனர் . மகிந்த கொண்டுவந்த பதினெட்டுக்கும் ,மைத்ரி கொண்டு வந்த
19க்கும் ,கோட்டா கொண்டு வந்த 20 க்கும் கை தூக்கினார்கள்.
நடந்தது என்ன? பச்சைக் குழந்தையையும் எரித்தார்கள். அப்பொழுது இந்த முஸ்லிம் தலைவர்கள்
வாய்
மூடி மௌனியாக கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இன்று ஜனாசா
அரிப்பை கேலி செய்கிறார்கள். அது மாபெரும் சட்டமாம். இவர்களால்
சமூகத்திற்கு ஆனதொன்றுமில்லை. மக்களே இப்படிப்பட்ட துரோகிகளை மீண்டும்
அரியாசனத்தில் ஏற்ற விரும்புகிறீர்களா?
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கண்டியில் பேசும் போது தான் 30 வருட பாராளுமன்ற
வாழ்க்கையைவிட்டு ஓய்வு பெறவிருப்பதாகவும் அதற்கு பிரதி ஈடாக பாரத்
அருள்சாமியை எம்பியாக்க இருக்கிறாராம்.
எவ்வளவு
துரோகத்தனம்? மக்களுக்கு விளங்குமா? இவர் பாரத் அருள்சாமியின் தோளின் மேல்
ஏறி தான் எம்பியாவதற்கு தாளம் போடுகிறார். இதை மனோ கணேசன் பின்னர் தான்
அறிவார்!
கண்டியில்
நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலத்தில் வந்தார்கள்.
இன்று அது குறைந்ததே அவரால்தான்.இவர் தான் எப்படியாவது எம்பி ஆக வேண்டும்
என்பதற்கு அம்பாறை போன்ற பிரதேசங்களில் தனித்து கேட்பதற்கு காரணம் .
ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்
காங்கிரஸ்
தலைமையகம் தாருஸலாமில் வருகின்ற வாடகைப் பணம் யாரிடம் போகின்றது ? அங்கு
ஊழியம் செய்கின்றவர்கள் யார்? இதனை மக்கள் அறிவார்களா?
இவர்கள் அனைவரும் ஹக்கீமின் குடும்ப உறவினர்கள் .
தாருஸ்ஸலாமால் முஸ்லிம் சமூகத்திற்கு இதுவரை கிடைத்தது என்ன ?ஆக நோன்பு காலத்தில் குர்பான் கொடுப்பார்கள்.
கிழக்கில்
தாருசலாம் அமைப்போம் என்றார்கள். எதைக் கிழித்தார்கள்? அங்குள்ள
நிர்வாகிகள் 100 பேரும் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களை சேர்த்து
வைத்திருக்கின்றார்.
இவர்களால் சமூகத்துக்கு கிடைத்த நன்மைகள் என்ன?
யானை மனித மோதல் பற்றி கதைக்கிறார்கள். அண்மையில் சாய்ந்தமருதுக்குள் யானை வந்து போனது. என்ன செய்தார்கள்?
இன்னமும்
ஆதவன் பாட்டும் அஷ்ரப்பின் போட்டோவும் வைத்து மக்களை ஏமாற்றலாம் என்று
நினைக்கிறார்கள். அது இம்முறை செல்லுபடியாகாது என்பதனை அவர்கள் அறிய
வேண்டும். ஆஷ்ரப்பின் வாழ்க்கையாவது எதிர்கால இஸ்லாமிய சந்ததிக்கு
வழங்கினார்களா? இல்லை தேர்தல் காலத்தில் மாத்திரம் அவரது போட்டோ
தேவைப்படுகிறது.
இன்று
தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் வேட்பாளர்களால் என்ன செய்ய முடியும்?
அவர்கள் இறுக்கமான கட்சி .அவர்களால் சுயாதீனமாக இயங்க முடியாது.
எனவே
தான் முஸ்லிம்களுக்கு என்று பாராளுமன்ற உறுப்பினரை வரவழைக்க வேண்டுமானால்
நல்லாட்சி தேசிய முன்னணியில் சுயாதீனமாக இயங்கக்கூடியவர்களை தெரிவு
செய்யுங்நள்.
ஏனைய கட்சிகளில் இம்முறை எந்த முஸ்லிமும் வர முடியாது என்பதை நீங்கள் அறிய வேண்டும் .
எனவே நல்லாட்சி தேசிய முன்னணி கட்சிக்காக வாக்களியுங்கள். என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours