எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு


மட்டக்களப்பில் உள்ள பாரிய குளங்களில் ஒன்றான உன்னிச்சை குளம் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதனால் வவுணதீவு பிரதேச மக்களை அவதானத்துடன் இருக்குமாறு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  கரவெட்டி மற்றும் மகிழவெட்டுவான் பகுதிகளை சேர்ந்த மக்களையும் அத்தோடு தாழ்நில பிரதேசங்களை சேர்ந்த மக்களையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும் 10 அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பி வருகின்றதனால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களையும் அவதா னத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் 24 குடும்பங்களை சேர்ந்த 91 நபர்கள் இதுவரை உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இத் தொகையானது மேலும் அதிகரிக்கலாம் என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours