( களத்தில் வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சடலங்கள்  இன்று புதன்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இப் பேரனர்த்தத்திற்கு காரணமான உழவு இயந்திரம் மற்றும் அதன் பெட்டி கனரக இயந்திரம் மூலம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன.

மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.


சம்பவம் இடம்பெற்ற காரைதீவுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்எல்எம்.ஹனிபா ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

முப்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விமானப்படை விமானமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

எனினும் 
இதுவரை ( பகல் ஒரு மணி வரை) இரண்டு சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. மேலும் நால்வர் இன்னமும் மாயமாகியுள்ளனர். தேடுதல் தொடர்கிறது.


 நேற்று காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய எட்டு மதரசா மாணவர்கள் உட்பட 11 பேர வெள்ளத்தில் அள்ளுண்டமை தெரிந்ததே.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours