(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைத் தொகுதியின் 3 இலக்க வெற்றி வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து இடம்பெற்ற மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் (8) நேற்று வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் மழைக்கு மத்தியிலும் பெரும் திரளான மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்டத்தில், கல்முனைத் தொகுதியின் மரச்சின்னத்தில் இலக்கம் 3 இல் போட்டியிடும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டதோடு, விசேட அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் சாய்ந்தமருது மத்திய குழுவின் அமைப்பாளர் பிர்தௌஸ் ஆசிரியர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளரும் உயர் பீட உறுப்பினருமான ஜலால்டீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அமானுல்லா மற்றும் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய முன்னாள் அதிபர் ஏ.எல்.எம்.சியாத், சாய்ந்தமருது மத்திய குழுவின் பிரதிச் செயலாளர் அஸ்வர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசார், வேட்பாளர் திலக் காரிய வசம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours