இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விஜித ஹேரத் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், மொத்தமாக 716,715 வாக்குகளை பெற்றுள்ளார்.

மேலும், அதே மாவட்டத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களான அனில் ஜயரத்ன பெர்னாண்டோ 162, 433 வாக்குகளையும், மஹிந்த ஜயசிங்க 137, 315 வாக்குகளையும், எச் டி கிறிசாந்த சில்வா அபேசேன 121, 825 வாக்குகளையும், எம்.எம் மொஹமட் முனீர் 109,815 வாக்குகளையும் ஆர்.ஏ அசோக சப்புமல் ரன்வல 109,332 வாக்குகளையும், என்.டி விஜேசிங்க 83,061 வாக்குகளையும், ருவன் நிஷாந்த மாபா கம 78,623 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட ஹர்சன ராஜகருணா 67,004 வாக்குகளையும், காவிந்த ஜயவர்தன 37,597 வாக்குகளையும், அமில பிரசாத் 23,699 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours