மாளிகைக்காடு செய்தியாளர்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.த (உ/த) 2025ஆம் வருட உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகளது குழு செயற் திட்டத்தினை அடிப்படையாக கொண்ட "Expo Experts - 2024" எனும் தொனிப்பொருளில் வணிக கண்காட்சியும் சந்தைப்படுத்தலுக்கான விற்பனை ௯டமும் வர்த்தகப் பிரிவு ஆசிரியர் ஏ.ஏ. றிஷாம் அவர்களின் வழிகாட்டலில் வியாழக்கிழமை (07) உயர்தர வணிக மன்றம் மற்றும் கலை வர்த்தக பிரிவின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் ஸ்மார்ட் கட்டிட தொகுதியில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். சஹதுல் நஜீம் அவர்கள் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக பாடசாலை பிரதி அதிபர் ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, இலங்கை வங்கி உதவி முகாமையாளர் மற்றும் கிளை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வர்த்தகப் பிரிவு மாணவிகளுடைய படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கம் மூலம் இளம் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதுடன் இது எதிர்காலத்தில் தொழில் முனை நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த விரைவாக்கவும் மாணவிகள் தொழில் முனைவோர் செயல்முறை அனுபவிக்க அனுமதிக்கிறது. வணிக கண்காட்சியில் விற்க தங்களது தயாரிப்பு அல்லது சேவையை தயாரிப்பாளர்கள் அவர்களின் முயற்சிகளில் ஆக்கபூர்வமாகவும் வெற்றிகரமானதாகவும் லாபகரமாகவும் இருக்குமாறு அனைவரையும் ஊக்குவிப்பது செயற் திட்டத்தின் நோக்கமாகும்.
இக்கண்காட்சியில் மாணவிகள் செயன்முறை பயிற்சியினை உற்சாகமாகவும் வினைத்திறன் முறையில் செயற்பாட்டமை காணக்௯டியதாக இருந்தன. இந்நிகழ்வில் இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் தமது கிளை ஒன்றினை நிறுவி மாணவிகளுக்கு வங்கி நடைமுறை தொடர்பான விளக்கங்கள் வழங்கியிருந்தது. கண்காட்சியும் சந்தைப்படுத்தலுக்கான விற்பனை ௯டமும் நவம்பர், 07 தொடக்கம் 09ஆம் திகதி பி.ப 2:00 மணி வரை 03 நாட்களுக்கு இடம்பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான என்.டி நதீகா, எம்.எஸ் மனூனா, கலை வர்த்தகப் பிரிவு ஆசிரியர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours