( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழா எதிர்வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது . அவர்கள் அனைவருக்கும் அங்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கின்றனர் என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.

திருகோணமலை உவர்மலை விவேகானந்த கல்லூரியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ம்ஆண்டில்
நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் விருதுகள் வழங்குவதற்காக தெரிவு
செய்யப்பட்டுள்ள கலைஞர்களுக்கு இது தொடர்பாக அந்தந்த கலாசார உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours