( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்
பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்னாள்
வண்ணக்கரும், பிரபல புராண பயனிகருமான கலாபூஷணம் தம்பிமுத்து மகேந்திரா
எழுதிய "கந்தபுராண அமிர்தம்" என்ற நூல் வெளியீட்டு விழா திருக்கோவில்
ஆலயத்தில் நேற்று முன்தினம் (2) சனிக்கிழமை நடைபெற்றது.
முதலில்,
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் மற்றும் ஆலய குரு சிவ
ஸ்ரீ அங்குசநாதக் குருக்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு எழுத்தாளர்
மகேந்திராவால் முதல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பின்னர்,
ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மற்றும் வண்ணக்கர்
வன்னியசிங்கம் ஜயந்தன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பிரதிகள் வழங்கி
வைக்கப்பட்டன.
தொடர்ந்து,
முன்னாள் திருக்கோவில் தவிசாளர் இ.வி.கமலராஜன், பிரபல ஊடகவியலாளர் வி.ரி.
சகாதேவராஜா ,ஆலயசந்தானத்து பிரதிநிதி க. பார்த்திபன்( பிரான்ஸ் )உள்ளிட்ட
பல பிரமுகர்களுக்கு முதல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆலயம் சார்பில் எழுத்தாளர் மகேந்திராவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
எழுத்தாளர்
மகேந்திராவின் பேத்தியான தாதிய உத்தியோகத்தர் திருமதி கௌசிகா
சியாம்சுந்தர் இந்த நூலை தனது பாட்டனாருக்காக அச்சிட்டு வெளியிட்டு
இருந்தமை குறிப்பிடத்தக்கது.
விழாவில் அவரும் பாட்டனாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நிகழ்வை நெறிப்படுத்தி நன்றியுரையையும் வழங்கினார்.
விழாவில் ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் சிறப்புரையாற்ற,நூலாசிரியர் கலாபூஷணம் தம்பிமுத்து மகேந்திரா ஏற்புரை வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours