( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2025ஆம் ஆண்டுக்கான மாகாண
இலக்கிய விழாவில் போட்டிகளை நடத்தி விருது வழங்கி
கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளை இனங்கண்டு
அவர்களை பாராட்டி கௌரவிப்பதன் மூலம், அவர்களது கலை இலக்கியப் பணிகளுக்கு
அங்கீகாரம் வழங்குவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு படைப்புலக முன்னோடிகளாக
அவர்களை இனங்காட்டுவதனை நோக்கமாகக் கொண்டதாக இந்த விழா அமையும்.
பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விருதுகள் வழங்குவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. இலக்கிய படைப்புகளுக்கான 'சாகித்தியவிருது' வழங்கல்:
இலக்கியப் படைப்புகளுக்கான விருது வழங்கலின் பொருட்டு 2024 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்ட சிறந்த நூல்கள், இலக்கிய சஞ்சிகைகள், குறுந்திரைப்பட ஆக்கங்களைத் தேர்வு
செய்யும் வண்ணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, இலங்கையில் வாழும் எழுத்தாளர்களுக்கும்,
குறுந்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தமது படைப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம்
வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (இலங்கைக்கு வெளியே வாழும் எழுத்தாளர்கள்
விண்ணப்பிக்குமிடத்து அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)
இதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தை 01 ந் திகதி தொடக்கம் 2024 மார்கழி 31 ந் திகதி
(01. 01. 2024 – 31. 12. 2024) வரையிலான காலப்பகுதியில் முதலாம் பதிப்பாக
வெளியிடப்பட்டதும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அத்துடன் இலங்கைக்குள் வாழுகின்ற
எழுத்தாளர்களுடைய தமிழ் மொழிமூலமான நூல்களின் தலா நான்கு (04) பிரதிகளை
தேர்வுக்காகச் சமர்ப்பித்தல் வேண்டும்.
குறுந்திரைப்படப் பிரதிகளாயின் கடந்த இரண்டு வருடங்களுக்குள் (2023, 2024) தங்களால்
தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் இரண்டு பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.
(குறுந்திரைப்பட சாயலில் அமைந்த பாடல்களையும் அனுப்ப முடியும், ஏற்கனவே போட்டிக்கு
அனுப்பப்பட்ட குறுந்திரைப்படங்களை மீண்டும் அனுப்ப வேண்டாம்)
எம்மால் தேர்வு வகுதிகளாக அல்லது வகைகளாக குறிக்கப்பட்டுள்ள புத்தகங்கள், சரியான
பிரிவினுள் உள்ளடங்கும் வண்ணம் பிரிவு குறிக்கப்பட வேண்டும். நீங்கள் விண்ணப்பித்த
பிரிவினுள் உள்ளடக்கப்பட முடியாத (புத்தகங்கள்) நூல்கள் நிராகரிக்கப்படும். (அவ்வாறு
நிராகரிக்கப்படும் நூல்களை குறித்த எழுத்தாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு வந்து
பெற்றுக் கொள்ளலாம்)
படைப்புக்களை 15. 02. 2025 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதேச செயலகத்திலுள்ள
பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார உத்தியோகத்தரிடம் (உறையிலிட்டு பாதுகாப்பாக)
கையளிக்கப்படல் வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கடித உறையின் இடது பக்க
மேல் மூலையில் 'கிழக்கு மாகாண இலக்கிய படைப்புக்களுக்கான தேர்வு - 2024' என
குறிப்பிடல் அவசியமாகும்.
நூல் விருது வழங்கலுக்கான ஆக்கங்கள், படைப்புக்கள், நூற்பிரதிகள் யாவும் முற்றுமுழுதாக
தமிழ் மொழிமூலமான நூல்களாக இருத்தல் வேண்டும். (பிறமொழிக்கலப்புடைய நூல்களுக்கு
மதிப்பீட்டின்போது புள்ளிகள் குறைத்து வழங்கப்படும்) மேலும் ஒரு படைப்பு ஆகக்குறைந்தது
200 பக்கங்களையாவது கொண்டிருக்க வேண்டும். குறைந்த பக்கங்களையுடைய
படைப்புக்களுக்கு புள்ளிகள் வகுத்து வழங்கப்படும்.
சிறுவர் இலக்கியத்திற்கான படைப்புக்கள் ஆகக்குறைந்தது 80 பக்கங்களையாவது
கொண்டிருக்க வேண்டும். குறைந்த பக்கங்களையுடைய படைப்புக்களுக்கு புள்ளிகள் வகுத்து
வழங்கப்படும்.
அ. நூல் விருது வழங்கலுக்கான ஆக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு கீழ்க்காணும் பிரிவுகளைச்
சேர்ந்த தமிழ் மொழியில் பிரசுரமான படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
1. சுய நாவல்:
2. சுய சிறுகதை:
3. சுய மரபுக்கவிதை:
(சுயமரபுக்கவிதை என்னும் வகுதிக்குள் குறுங்காவியமும் உள்ளடங்கும்)
4. சுய புதுக்கவிதை:
5. நாடகம், நாட்டுக்கூத்து:
6. அறிவியலும் தொழில்நுட்பமும்:
7. புலமைத்துவ மற்றும் ஆய்வு சார் படைப்பு: (மொழியியல், சமூகவியல், மானிடவியல்,
மெய்யியல், கல்வியியல், கலைகள், மற்றும் திரைப்படத்துறை)
8. வரலாறு:
9. சமூக விஞ்ஞானம் சார்ந்த நூல்கள்:
(அ)சோதிடம், (ஆ)ஆன்மீகம், (இ)ஆயுள்வேத மருத்துவம்
10. நாட்டார் இலக்கியம் மற்றும் அழகியல் சார்ந்தவை:
11. மொழிபெயர்ப்பு நூல்கள்:
12. நானாவிதம் (மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளுக்குள் உள்ளடக்க முடியாதவை):
13. இலக்கிய சஞ்சிகைகள்:
(2024 ஆம் ஆண்டு வெளிவந்தவை)
ஆ. சிறுவர் இலக்கியம்:
இம்முறை சிறுவர் இலக்கியத்திற்கான பகுதிகள் பின்வரும் வகுதிகளாக வகுக்கப்படுகின்றன:
(1) சிறுவர் கவிதைகள் மற்றும் சிறுவர் பாடல்கள்.
(2) சிறுவர் கதைகள்.
(3) சிறுவர் நாடகங்கள்.
(4) சிறுவர் இலக்கியம் தொடர்பான ஆய்வுகள்.
இ. குறும்பட ஆக்கங்கள்:
குறும்பட ஆக்கத்திற்காக விண்ணப்பிப்பவர் 2023/ 2024ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட
திரைப்படங்களை அனுப்பி வைக்கலாம். ஒரு திரைப்படத்தின் இரண்டு பிரதிகளை
சமர்ப்பிக்க வேண்டும். 5 நிமிடங்கள் தொடக்கம் 15 நிமிடங்கள் வரையான
குறும்படங்களாக இருத்தல் வேண்டும். இலங்கையின் இறைமை மற்றும் மதஉணர்வுகளை
பாதிக்காதவகையில் குறுந்திரைப்படம் அமைதல் வேண்டும்.
இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 026 – 2220036, 026 2220076 எனும் தொலைபேசி
இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். விண்ணப்பப்படிவங்களை கிழக்கு மாகாண
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும், கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச
செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
2. கிழக்கு மாகாணத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்காக காத்திரமான
பங்களிப்புக்களை ஆற்றிய, ஆற்றி வருகின்ற மூத்த கலைஞர்களைப் பாராட்டிக்
கௌரவித்து 'வித்தகர்' விருது வழங்கல்:
2025ம் ஆண்டுக்கான இலக்கிய விழாவின் போது, கிழக்கு மாகாணத்தின் கலை இலக்கிய
வளர்ச்சிக்காக, காத்திரமான பங்களிப்புக்களை ஆற்றிய, ஆற்றி வருகின்ற சிரேஸ்ட
கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவித்து விருது வழங்குவதற்கு, பண்பாட்டலுவல்கள்
திணைக்களம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களை
நிரந்தர வதிவிடமாக கொண்ட இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள், துறைசார் வல்லுனர்கள்
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர் 31.12.2024ம் திகதியன்று 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல்
வேண்டும்.
விருது அல்லது கௌரவம் வழங்கும் துறைகள்:
இலக்கியவித்தகர்:
(இலக்கியத்தின் எழுத்து வடிவங்களான சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம் மற்றும்
கலை இலக்கியம் சார் ஆய்வுக்கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை வெளியீடு மற்றும்
அதனோடிணைந்த ஆக்க இலக்கியங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் கலைஞர்கள்)
நாட்டாரியல் வித்தகர்:
(நாட்டுக்கூத்து, நாட்டார்பாடல், வசந்தன், பக்கீர்பைத், பொல்லடி, கப்பறிஞ்ஞா மற்றும் இது
போன்ற நாட்டார் கலைகளில் ஈடுபடும் கலைஞர்கள்)
ஊடகவித்தகர்:
(இலத்திரனியல், அச்சு மற்றும் டிஜிடல் ஊடகங்களில் முழுநேரமாக ஈடுபடுவதுடன்
அத்துறைமூலம் எமது கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் கலைஞர்கள்)
நுண்கலை வித்தகர்:
(ஓவியம், சிற்பம், கைவினைக் கலைப்பொருட்களை உருவாக்குதல், புகைப்படம், மற்றும்
டிஜிடல் ஓவியங்கள் வரைதல் போன்றவற்றில் ஈடுபடும் கலைஞர்கள்)
ஆற்றுகை வித்தகர்:
(இசைத்துறை, பாடல், இசைக்கருவிகளை சரளமாகக் கையாளுதல், குறுந்திரைப்படம், நாடகம்,
சாஸ்திரிய நடனங்கள், யோகக்கலை போன்ற கலைகளில் ஈடுபடும் கலைஞர்கள்)
பல்துறை வித்தகர்:
(மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல துறைகளிலும் ஒருங்கே ஈடுபடும் கலைஞர்கள் பல்துறை
கலைஞருக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர். குறைந்தது ஐந்து அல்லது ஐந்துக்கு
மேற்பட்ட துறைகளில் ஈடுபடும் கலைஞர்கள்)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும்
உறுதிப்படுத்தப்பட்ட உரிய ஆவணங்களை எதிர்வரும் 15. 02. 2025 ம் திகதிக்கு முன்னர் தாம்
வசிக்கும் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிடம் அல்லது பண்பாட்டலுவல்கள்
திணைக்கள கலாசார உத்தியோகத்தரிடம் கையளிக்கவும். (எக்காரணம் கொண்டும்
திணைக்களத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டாம்)
3. கிழக்கு மாகாண 'இளங் கலைஞர் விருது' வழங்கல்:
கலை இலக்கியத்துறையில் சாதனை படைத்த, படைத்து வருகின்ற இளங்கலைஞர்களை
பாராட்டி விருது வழங்குவதற்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கலைகளை வளர்ப்பதற்காக பாடுபடுகின்ற இளைய தலைமுறை கலைஞர்களை
ஊக்குவிப்பதற்கும், அத்தகைய இளையோரை கௌரவிப்பதனூடாக மேலும் கலைகளில்
ஈடுபாடும் வளர்ச்சியும் காண வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்பாராட்டு வழங்கப்படுகின்றது.
ஆகக்குறைந்தது கடந்த ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தை நிரந்தர
வதிவிடமாக கொண்ட இளங் கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், துறைசார் வல்லுனர்கள்
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். சகல தெரிவுகளும் நடுவர்களால் வழங்கப்படும் அதிகூடிய
புள்ளிகளின் அடிப்படையிலேயே இடம்பெறும்.
விண்ணப்பிப்போர் 31.12.2024 ம் திகதியன்று 50 வயதிற்கு உட்பட்டவர்களாக அல்லது
கீழ்ப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விருது அல்லது கௌரவம் வழங்கும் துறைகள்:
இலக்கியம்:
(தமிழ் இலக்கியத்தின் எழுத்து வடிவங்களான சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம்
மற்றும் கலை இலக்கியம் சார் ஆய்வுக்கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை வெளியீடு
மற்றும் அதனோடிணைந்த ஆக்க இலக்கியங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் கலைஞர்கள்)
நாட்டாரியல்:
(நாட்டுக்கூத்து, நாட்டார்பாடல், வசந்தன், பக்கீர்பைத், பொல்லடி, கப்பறிஞ்ஞா மற்றும் இது
போன்ற நாட்டார் கலைகளில் ஈடுபடும் கலைஞர்கள்)
ஊடகம்:
(இலத்திரனியல், அச்சு மற்றும் டிஜிடல் ஊடகங்களில் முழுநேரமாக ஈடுபடுவதுடன் அத்துறை
மூலம் எமது கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் கலைஞர்கள்)
நுண்கலை:
(ஓவியம், சிற்பம், கைவினைக் கலைப்பொருட்களை உருவாக்குதல், புகைப்படம், மற்றும்
டிஜிடல் ஓவியங்கள் வரைதல் போன்றவற்றில் ஈடுபடும் கலைஞர்கள்)
ஆற்றுகை:
(இசைத்துறை, பாடல், இசைக்கருவிகளை சரளமாகக் கையாளுதல், குறுந்திரைப்படம், நாடகம்,
சாஸ்திரிய நடனங்கள், யோகக்கலை போன்ற கலைகளில் ஈடுபடும் கலைஞர்கள்)
4. நூல் கொள்வனவு – 2025:
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும்
'கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்யும் திட்டமானது' இவ்
வருடமும் இடம்பெற உள்ளது 01.01.2024 தொடக்கம் 31. 12. 2024 வரை கிழக்கு மாகாண
படைப்பாளிகளால் வெளியீடு செய்யப்பட்ட நூல்கள் எமது திணைக்களத்தின் நூல்
கொள்வனவுத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது. தங்களது நூலை வழங்க
விரும்பும் வெளியீட்டாளர்கள், உரிய விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து இரண்டு (02)
நூற்பிரதிகளுடன் அனுப்பி வைக்கலாம். அல்லது எதிர்வரும் 15. 02. 2025 ம் திகதிக்கு முன்னர்
தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிடம் அல்லது பண்பாட்டலுவல்கள்
திணைக்கள கலாசார உத்தியோகத்தரிடம் கையளிக்கவும்.
அனுப்பி வைக்கப்படும் நூல்கள் அனைத்தும் கொள்வனவு செய்யப்படும் என உறுதியளிக்க
முடியாது. (கடந்த காலங்களில் கொள்வனவுத் திட்டத்தினுள் உள்வாங்கப்படாத
விண்ணப்பதாரரிற்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்). தகுந்தவை
தெரிவுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நூல்களை எதிர்வரும் 15. 02 2025 க்கு முன்னர் எமது திணைக்களத்திற்கு பிரதேச கலாசார
உத்தியோகத்தர் ஊடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார
உத்தியோகத்தருடன் அல்லது பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 026 - 2220036 எனும்
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
5. நூலுருவாக்கம் - 2025:
கிழக்கு மாகாண படைப்பாளிகளின் ஆக்கங்களை (கையெழுத்துப்பிரதிகள்) நூல் வடிவில்
வெளியீடு செய்வதற்கு இவ்வருடமும் எமது திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் தகுதியானவர்கள் பின்வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
புலமைத்துவம் சார் படைப்புகள், பிரதேச மற்றும் கலை இலக்கியம் தொடர்பான ஆய்வுசார்
படைப்புகள், அறிவியலும் தொழில்நுட்பமும், பாரம்பரிய நாட்டார் கலை வடிவங்களின்
ஆவணத் தொகுப்பு, நாட்டுக்கூத்துப்பிரதி, வரலாற்று நாடகம், சிறுவர் இலக்கியம், சிறுகதை,
நாவல் போன்றவற்றை கையெழுத்துப் பிரதிகளாக வைத்திருக்கும் படைப்பாளிகள்
விண்ணப்பிக்கலாம்.
தமது ஆக்கங்களை (எழுத்துரு 12 – குழவெ ளணைந - 12) 400 பக்கங்களுக்கு மேற்படாதவாறும், 150
பக்கங்களுக்கு குறையதவாறும் டீ5 தாளில் அமையக்கூடியவாறு கணனியில் தட்டச்சு செய்து
வன்பிரதியையும் (ர்யசனஉழில) மேலும் அதன் மென்பிரதியையும் (ளுழகவஉழில) பாதுகாப்பாக
இறுவட்டு அல்லது விரலி (Pநn னசiஎநஇ ஊனு) மூலம் விண்ணப்பத்துடன் எமக்கு அனுப்பிவைத்தல்
வேண்டும். (ஈ-மெயில் மூலம் அனுப்பக்கூடியவர்கள் உரடவரசயடயககயசைளநிளூபஅயடை.உழஅ எனும் ஐனு
க்கு அனுப்பிவைக்கவும்.)
அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள் அனைத்தும் அச்சிடப்படும் என உறுதியளிக்க முடியாது.
(ஏற்கனவே எமது திணைக்களத்தால் ஒரு நூல் பதிப்பிக்கப்பட்டிருக்குமாயின், குறித்த
படைப்பாளி மீண்டும் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் கவனத்தில்
கொள்ளப்படமாட்டாது) தகுந்தவை நிதி வசதிக்கு ஏற்ப தெரிவுக்குழு மூலம் தெரிவு
செய்யப்பட்டு அச்சிட்டு வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கங்கள் யாவும்
15.02.2025க்கு முன்னர் எமது திணைக்கள முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
(ஏற்கனவே ஒரு எழுத்தாளரின் நூல் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டிருப்பின், வேறு ஒருவருக்கு
முன்னுரிமை அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்கப்படும்)
விருதுகளுக்காக விண்ணப்பிக்கும் கலைஞர்கள் எமது திணைக்களத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ள கலைமன்றங்களில் ஒரு அங்கத்தவராக இணைந்து செயற்பட்டிருந்தால்,
அல்லது எமது திணைக்களத்தால் நடத்தப்பட்ட பயிலரங்குகள் மற்றும் போட்டி நிகழ்வுகளில்
கலந்து கொண்டிருந்தால் அல்லது தாம் வாழும் பிரதேசத்தில் கலை இலக்கியத்துறைகளில்
ஈடுபட்டு வருபவர்களாயின் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விசேட புள்ளிகள்
வழங்கப்படும்.
சகல விருதுகளுக்குமான தெரிவுகளும் நடுவர்களால் வழங்கப்படும் அதிகூடிய புள்ளிகளின்
அடிப்படையிலேயே இடம்பெறும் அல்லது தீர்மானிக்கப்படும். துறைரீதியாக வழங்கப்படும்
விருதுகளின் எண்ணிக்கையானது, கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையின்
அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
ஏற்கனவே 'வித்தகர்' மற்றும்' இளங்கலைஞர்' விருது பெற்றவர்கள் மீண்டும் அதே
விருதுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பப்படிவங்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும், கிழக்கு
மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
hவவி:ஃஃறறற.நி.பழஎ.டம எனும் வலைத்தளத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பக்கத்தில்
தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் திகதியின் பின்னர்
கிடைக்கப்பெறும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
Post A Comment:
0 comments so far,add yours