எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி டச்பார், திருச்செந்தூர், நாவலடி மற்றும் புதுமுகத்துவாரம் ஆகிய பகுதிகளில் அதிக உறவுகள் காவு கொள்ளப்பட்டிருந்தனர், அதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபிகளில் சமய வழிபாடுகள் இடம் பெற்றன.
உயிரிழந்த உறவினார்களின் உறவுகளால் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் நினைவாக தாகசாந்தி மற்றும் அன்னதானம் என்பன வழங்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளில் சர்வ மத தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயிரிழந்த உறவுகளின் உறவுகள், பொது நிலையினர் என பலரும் கலந்து கொண்டு உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கடந்த 2004 ஆண்டு டிசம்பம் மாதம் 26 திகதி இடம் பெற்ற சுனாமி அனர்த்தத்தில் சுமார் 3000 உறவுகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours